ஆக்கப்பூர்வமான பேச்சு: இந்தியா – சீனா அறிக்கை

இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஏழாவது சுற்றுப் பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்தியா – சீனா நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய – சீன எல்லையில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே ஆறு சுற்றுப் பேச்சுகள் ஏற்கனவே நடந்து முடிந்தன. இதில் ஒருமித்த கருத்து எட்டபடவில்லை.

இந்நிலையில் இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த ஏழாவது சுற்று பேச்சுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து நடந்த ஏழாவது சுற்று பேச்சு நம்பிக்கை அளிப்பதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு பிரச்னையாக மாறக் கூடாது என்ற இரு நாட்டு தலைவர்களின் விருப்பத்தை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்த பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் இருந்து படைகளை மிக விரைவில் திரும்பப் பெறுவது குறித்து பரஸ்பரம் ராணுவம் மற்றும் தூதரக உறவு மூலம் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here