சுரேஷை மடக்கிய ரியோ

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த சீசன்களில் 2, 3 வாரம் சென்ற பிறகே முட்டல் மோதல் ஏற்படும். ஆனால் இந்த சீசனில் 2 ஆம் நாள் முதல் களேபரமாக உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் எவிக்ஷன் ப்ரீ பாஸ் டாக்கில் சுரேஷ் பேசியதை பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸுக்கு ஒளிப்பரப்பி காட்டினார்.

அப்போது பேசிய சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் உள்ளதாக கூறினார். இதனால் டென்ஷன் ஆன ரியோ சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் வந்த உடனேயே இதுகுறித்து கூற பிறகு தனியாக பேசலாம் என்று மழுப்பலாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில்,ரியோ சுரேஷிடம் இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்கு ன்னு சொன்னீங்களே? உண்மையில் இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்கா? நீங்க சொல்லும் போதே தெரியுது என்ன தான் சொல்லுறீங்கன்னு என்று கேள்வி கேட்கிறார். அதற்கு நிஷா உங்களுக்கு சப்போர்ட் செய்கிறார் என்று சொல்ல இதுல குரூப்பிஸம் எங்க இருக்கு என்று தொடர்ந்து ரியோ கேட்கும் படியாக அந்த ப்ரோமோ முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here