மருந்துகளின் தரம் கண்காணிக்கப்படும்

மார்க்சன்ஸ் பார்மா லிமிடட் நிறுவன சந்தையிலிருந்து இரண்டு மெட்ஃபோர்மினின் பொருட்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன. இவை சுகாதாத்ரதுறையில் மலேசியாவில் பதிவுசெய்யப்படவில்லை.

மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தில் (டி.சி.ஏ) பதிவுசெய்யப்பட்ட மெட்ஃபோர்மின் பொருட்கள் மட்டுமே நாட்டில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்க அனுமதிக்கப்படுகின்றன என்று மருந்து சேவைகளின் மூத்த இயக்குநர் டத்தின்  டாக்டர் ஃபரிடா ஆரியானி  முகமட் யூசோஃப் தெரிவித்தார்.

மொத்தம் 68 மெட்ஃபோர்மின் தயாரிப்புகள் பதிவு செய்யப்பட்டு மலேசிய சந்தையில் கிடைக்கின்றன, அவை என்-நைட்ரோசோடிமெதிலாமைன் (என்.டி.எம்.ஏ) சோதனைக்கு உட்பட்டுள்ளன.

அமைச்சின் தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ), விதியின் கீழ்  வரம்பை மீறியதாக இருந்தால் சந்தையில் இருந்து மெட்ஃபோர்மின் தயாரிப்புகளை  மீட்டுக்கொள்ளும் என்று டாக்டர் ஃபரிடா ஆர்யானி கூறினார்.

பதிவுசெய்யப்பட்ட தயாரிப்பு, தர கண்காணிப்பு திட்டங்கள் , மருந்துகளின் மூலம் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பை சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.  மருந்துகளின் தரம், பாதுகாப்பு செயல்திறன் எப்போதும் உறுதி செய்யப்படுகிறது.

இது குறித்து மக்களுக்கு அவ்வப்போது  தெரிவிக்கப்படும்  என்றும்  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here