அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள..

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்காக மாஸ்டர் படக்குழு இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக ஒரு பாடலை வெளியிடுகின்றனர்.

விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம், கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு நடுவே மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குட்டி ஸ்டோரி பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்கு ‘குவிட் பன்னுடா’ என்ற பாடலின் லீர்க்கல் வீடியோவை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here