இந்தியர்களின் சராசரி ஆயுள் கடந்த 30 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிகரித்துள்ளது.’லான்செட்’ ஆங்கில மருத்துவ பத்திரிகையில் இந்தியர்களின் ஆயுள் காலம் குறித்து வெளியிடப்பட்டுள்ள கட்டுரை:இந்தியர்களின் சராசரி வயது 1990ம் ஆண்டில் 59.6 ஆக இருந்தது.
2019ம் ஆண்டில் 70.8 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் மாநிலங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடும்போது மாறுபட்ட நிலைமைகள் உள்ளன. கேரள மாநிலத்தவரின் சராசரி ஆயுள் 77.8 ஆகவும்,உத்தர பிரதேச மாநிலத்தவரின் சராசரி ஆயுள் 66.9 ஆக உள்ளது.
பிரசவத்தில் பெண்கள் இறப்பது சில ஆண்டுகளுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. இப்போது அது குறைந்துள்ளது.இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு குறைவாக இருந்தது. தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் நீரிழிவு,இதய பாதிப்பு,பக்கவாதம்,நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது காற்று மாசு,புகையிலை பொருட்கள் பழக்கம்,மோசமான உணவு பழக்கம் ஆகியவற்றால் தான் கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.