80,000 பஸ் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்

சென்னை, தாம்பரம் ரயில் நிலையம் அருகே, நெடுஞ்சாலைத்துறையால், நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, இந்த பணிக்காக சாலையை தோண்டியபோது, மின்வடங்கள் சேதப்படுத்தப்பட்டன.மின்வடங்கள் சேதப்படுத்தப்பட்டதால், அதிகாலை, 4:00 மணிமுதல், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்தும், காலை, 10:00 மணிவரை, மின்வாரிய அதிகாரிகள், மின்வடங்களை சீரமைக்க, ஊழியர்களை அனுப்பவில்லை.

அதன்பின், ஊழியர்கள் வந்தும், பணிகள் மந்தமாக நடந்ததால், மாலை, 4:00 மணி வரை, ஆயுத பூஜை உள்ளிட்ட, பண்டிகை தினங்களுக்கான பஸ் டிக்கெட் முன்பதிவில், தடை ஏற்பட்டது.மின்சாரம் இன்றி, நேற்று ஒரே நாளில், 80 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியாமல் போனதாக, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here