இலங்கை பிரச்னை கை கொடுக்குமா?

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடுக்கிப்பிடி போட, பா.ஜ., மேலிடம் தயாராகி வருகிறது.மோடி பிரதமர் பதவியில் அமர்ந்த பின், முதலில் இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார்.

பிரதமரின் இந்த பயணம், அங்கு தமிழ் பள்ளிகளில், தமிழ் மாணவர்களுடன் மோடி பேசுவது ஆகிய, ‘வீடியோ’க்களை, பா.ஜ., மேலிடம் தயார் செய்துள்ளது.தமிழக மீனவர்களின் நலனுக்காக, இலங்கையுடன், பா.ஜ., அரசு செயல்படுத்திய திட்டங்களும், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவை பார்த்து, பிரதமர், ‘ஓகே’ கூறியுள்ளாராம்.

தேர்தலுக்கு முன், இந்த வீடியோக்கள் வெளியாக உள்ளன. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மத்தியில், காங்., கூட்டணி அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது.அப்போது, தி.மு.க., வினர், வாய் மூடி இருந்ததை, தமிழக மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், இந்த வீடியோக்களை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here