கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கு அந்த நோய் ஏற்படுவற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பிரிட்டன் அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு கூறியதாவது:
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டவா்களுக்கு, அந்த நோயைத் தடுக்கும் எதிர்பார்ப்பு சக்தி உடலில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை.
எனவே, அவா்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்படலாம். தற்போது கரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில், மீண்டும் அந்த நோய்த் தாக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்தக் குழு கூறியுள்ளது.