சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் 55 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்த சென்னிமலை – மல்லியம்மாள் தம்பதி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்துவீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் நிலம் உள்ளது.
இந்நிலையில் சென்னிமலை குடும்பத்தாருக்கும், கிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நிலப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த தகராறு மோதலாக மாறி , கிருஷ்ணன் அவரது மனைவி ரஞ்சிதம் மகன்கள் அசோகன் , பொன்னுவேல் , விஜயன் ஆகியோர் சேர்ந்து சென்னிமலையின் மனைவி மல்லியம்மாளை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது .
இதில் , தலையில் படுகாயமடைந்த மல்லியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் .
அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகிச்சை பலனின்றி மல்லியம்மாள் உயிரிழந்தார் .
இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் மல்லியம்மாளை அடித்து கொலை செய்த குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர் .










