விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சரத்குமார்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க தயாராக இருக்கும் திரைப்படம் தான் 800. திரைப்படத்தின் மையக் கதை என்னவென்றால் இலங்கையைச் சேர்ந்த பிரபல பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது.

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழர்களை கொடுமைப்படுத்திய சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் குரல் கொடுத்ததால் அவரின் வாழ்க்கை படத்தை வெளியிடவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் எதிர்ப்புகள்,பேச்சுக்கள்,விவாதங்கள் என நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விஜய் சேதுபதி மவுனம் காத்து வருகிறார். ரசிகர்கள் அன்பு அறிவுரை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் நடிகர் மற்றும் அரசியல் பிரமுகரான சரத்குமார் தற்போது விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது “கலைஞர்களை அணையிட்டு தடுக்காதீர்கள் அவர்களுக்கு எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் சுதந்திரத்தை வழங்குங்கள்” என கூறியுள்ளார். இந்த அறிக்கை இந்த விவகாரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here