கனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல் நீட்டிப்பு

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அமெரிக்கா உடனான எல்லை மூடப்படுவது நவம்பர் 21 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மார்ச் மாதம் முதல் அண்டை நாடான அமெரிக்கா உடனான எல்லை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் நாட்டு மக்களுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா உடனான எல்லை மூடல் நவம்பர் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சர் பில் பிளேயர் அறிவித்துள்ளார். இதனை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவை உறுதிப்படுத்தினார்.

எல்லை தாண்டிய வருகைகள் தடைசெய்யப்பட்டாலும், வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 437 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here