மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் கைது

கோம்பாக், கம்போங் கெர்தாஸ் என்ற இடத்தில் தனது யமாஹா எல்.சி. 135 மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு விடியற்காலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்துள்ளார்.

புகாரினை பெற்ற போலீசார் மோட்டார் சைக்கிள் களவுபோன 3ஆவது நாளான 14.10.20 மாலை 6 மணியளவில் கோம்பாக் மாவட்ட போலீசார் தாமான் ஹரமாண்டிஸ் கோம்பாக் என்ற இடத்தில் சோதனை நடத்தியபோது சந்தேகத்திற்குரிய 3 பேரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அதில் ஒரு ஆடவர் தப்பி சென்று விட்டான்.

34 மற்றும் 35 வயதுடைய இரு மலாய் ஆடவர்கள் இருவரில் ஒருவர் ஏற்கெனவே ஸ்தாப்பாக் போலீசாரால் செக்‌ஷன் 39b வழக்கின் கீழ் போதைப் பொருள் குற்றசாட்டில் தேடப்படும் பட்டியலில் இருப்பவராவார்.

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்தபோது 4 மோட்டார் சைக்கிளின் பாகங்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் இன்ஜின் ஆகியவற்றை கைப்பற்றினர். அம்மோட்டார் சைக்கிள்கள் கோம்பாக் வட்டாரத்தில் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது.

இவர்களை செக்‌ஷன் 379a கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் இதன் வழி 6 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்திற்கு தீர்வு கண்டிருப்பதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here