பிறை வளாகத்தில் உள்ள எஃகு ஆலை தீப்பிடித்து எரிந்ததில் ஆலையின் 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
மாலை 4.28 மணியளவில் ஒரு துயர அழைப்பு வந்தவுடன் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்று பெராய் தீயணைப்பு மீட்புத் துறை செயல்பாட்டுத் தலைவர் அஸ்ருல் கைரி அபுபக்கர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, தீயணைப்பு வீரர்கள் மூன்று மாடி கட்டடத்தில் உருகும் உலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர், மேலும் அவ்விடத்தில் 30 சதவிகிதம் பகுதி சேதமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
.அஸ்ருல் கைரி கூறுகையில், ஆறு தொழிலாளர்களில் நான்கு பேர், 40 வயதில் உள்ளவர்கள் காயமடைந்தனர். மற்ற இருவரின் உடலில் 30 சதவீத தீக்காயங்கள் இருந்தன. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் , இழப்புகளின் அளவு இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்ரு அவர் மேலும் கூறினார்.