திருமணத்திற்கு பின், மீண்டும் நடிக்க வந்த நடிகை நமீதாவுக்கு, எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. சில காலம், சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், தற்போது, பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். சினிமா தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நமீதா புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி, நண்பர்களுடன் இணைந்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை, ஆர்.எல்.ரவி மற்றும் மாத்யூ சகாரியா இணைந்து இயக்குகின்றனர்.