யோகிபாபுவுக்கு இவ்வளவு பெரிய இளகிய மனசா

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்தி தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு தற்போது விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய்மாமா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய யோகிபாபு கூறுகையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் என்னை ஹீரோவாக்கி நிற்க வைத்துள்ளார். இந்த படம் ஆரம்பத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதற்காக தயாரானது என்று அவர் கூறினார். உடனே நான் அவர் பெரிய ஜீனியஸ் நான் எப்படி என கேட்டேன். பின்னர் அவரது உதவியுடன் நடித்து முடித்துவிட்டேன்.

சம்பள விஷயத்தில் நான் ரொம்ப கறாரெல்லாம் கிடையாது. சமீபத்தில் பெண் இயக்குனர் ஒருவர், நான் ஒரு கதை பண்ணியிருக்கிறேன். அதை நீங்கள் நடித்துக் கொடுத்தால் நல்லா இருக்கும். ஆனால் என்கிட்ட பெரிய பட்ஜெட் எல்லாம் கிடையாது என்று கூறினார்.

மேலும் இந்த படம் நடந்தால் தான் எனக்கு கல்யாணம் ஆகும் எனவும் கூறினார்.உடனே நான் இலவசமாகவே நடித்து தரேன்மா.முதல்ல உனக்கு கல்யாணம் நடக்கட்டும் என்று கூறினேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் உங்களுக்கு பெரிய மனசுதான் என பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here