பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் உருவான படம்தான் ‘மகாநடி’. இந்த படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.
அந்த படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கின்றார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.
மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் மிகவும் ஒல்லியான கீர்த்தி சுரேஷை கண்டு என்ன சிம்ரென் இது? எலும்பும் தோலுமாகி இப்படி ஆயிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கீர்த்தி சுரேஷ் தற்போது கருப்பு நிற மெல்லிய புடவையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.