இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய எரிபொருள் அமைப்பு மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டால் குறிப்பிடத்தக்க அளவில் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது என்றும், இந்தியா 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமித்துள்ளது என்றும் தெரிவித்தார். பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் எரிபொருள் தேவையும் அதிகரிக்கும் என்றும் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார்.