சபா சுகாதார அமைப்பு காரணமாக மாநிலத்தில் கோவிட் 19 உயர்வின் காரணமாக உருக்குலைந்து இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சுகாதார தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மறுத்துள்ளார்.
சுகாதார மலேசியாவின் நிதிப் பிரிவு (MOH) சபாவுக்கான அவசரகால கொள்முதல் உட்பட பல ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், தொற்றைக் கையாள்வதில், நிதி ஒருபோதும் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்று அவர் கூறினார்.
நாங்கள் ஒரு நல்ல சுகாதார முறையை செயல்படுத்தவில்லை அல்லது அது சரிந்துவிடும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர் போலும். ஆனால் அது உண்மையல்ல.
மருத்துவமனைத் திறனைப் பொறுத்தவரை (சபாவில்), படுக்கைகளின் பயன்பாடு 52 சதவீதம் மட்டுமே. தீவிர சிகிச்சை பிரவு 128 படுக்கைகளைக் கொண்டுள்ளது, இது 60 சதவீத பயன்பாட்டில் உள்ளது. ஓரிரு வழக்குகளுக்கு 26 தனிமைப்படுத்தப்பட்ட , குறைந்த ஆபத்துள்ள சிகிச்சை மையங்களும் எங்களிடம் உள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சிகிச்சை பெற எந்த ஆபத்தும் இல்லாத மூன்றாம் நிலை நோயாளிகளை பரிசீலித்து வருகிறோம். தேவைப்பட்டால் மேலும் ஆறு தனிமைப்படுத்தப்பட்ட, குறைந்த ஆபத்துள்ள சிகிச்சை மையங்களை உருவாக்குவற்கும் தயராக இருக்கிறோம் என்று கோவிட் -19 இன் முன்னேற்றங்கள் குறித்த விளக்க செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.