ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது

”பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும்” என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் கூறினார்.தமிழக பா.ஜ. தலைமையகத்தில்முருகன் அளித்த பேட்டி: ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசி உள்ளார். நாட்டில் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. மனுஸ்மிருதி உட்பட வேறு எதுவும் நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இல்லாத ஒன்றை தடை செய்ய கோருவது வேடிக்கையாக உள்ளது. பெண்களை இழிவுப்படுத்துவோருக்கு ஸ்டாலின் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக பா.ஜ. மகளிர் அணியினர் தக்க நேரத்தில் தக்க பாடம் கற்பிப்பர். ஸ்டாலின் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்படும்.கருப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர் அணியினர் உதவி செய்துள்ளனர். இதன் வாயிலாக அவர்களின் பின்னணியில் தி.மு.க. இருப்பது உறுதியாகி உள்ளது. இவற்றை எல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here