சசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அவரது நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர் சசிகலா. இவர் அதிமுகவில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இருக்கும்போதே உசிலம்பட்டியில் சசிகலா பேரவை தொடங்கப்பட்டது.

அப்பேரவையைத் தொடங்கிய வழக்கறிஞர் சேது இப்போது திமுகவில் உள்ளார் என்பது வேறு கதை.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா எப்போது வெளியே வருவார் என்ற விவாதம் அண்மைக்காலமாக நடக்கிறது. அதிலும் அடுத்த வாரமே அவர் விடுதலையாவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறி வருகிறார்.

சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தவும் அவரது வழக்கறிஞர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பபட்டுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் சசிக்கலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் சசிகலா பாண்டிய நாட்டு வாரிசு, முத்துராமலிங்க தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்தவர், அவருக்காக தற்கொலை படையாக மாறவும் தயாராக உள்ளோம்.

2021 ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழனம் காக்க தமிழ்நாட்டின் மக்களை காக்க ஆணையிடு.! ஒற்றர்படை போர்படை தயார் என அச்சிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதி முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து போஸ்டர்கள் ஒட்டி அவருக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here