‘வாழும் கலை பயிற்சி அளிப்பதாக கூறி, பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட அமெரிக்கருக்கு, 120 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேத் ரானியர், 60. இவர் வாழும் கலை பயிற்சி அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில், பணக்காரர்கள், சமூகத்தில் பிரபலமானவர்கள் என பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.’தன்னை கடவுள் அருள் பெற்றவன்’ என, கூறிக் கொண்ட கேத் ரானியர், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுடன், பாலியல் உறவு கொண்டுள்ளார். 15 வயது முதல், 40 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களின் உடல்களில் தன் பெயரையும், கேத் ரானியர் அச்சிட்டார். இது பற்றி சில பெண்கள், போலீசில் புகார் செய்தனர். கடந்த, 2018ல், கேத் ரானியரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் கபர்சிஸ், ‘கேத் ரானியர், பெண்களை ஏமாற்றி, பாலியல் உறவு கொண்டுள்ளது, நிரூபிக்கப்பட்டுள்ளது.’இரக்கமற்ற ரானியரின் செயலை, மன்னிக்கவே முடியாது. அவருக்கு, 120 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ என, நேற்று தீர்ப்பளித்தார்.