சட்டசபை தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நவ.,2 மற்றும் 3ல் ஆலோசனை நடத்துகிறார்.இதுகுறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி சார்பில் தெரிவித்துள்ளதாவது.
தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, மாநிலம் முழுவதும் கமலின் சுற்றுப்பயண விவரம் மற்றும் கட்சி தேர்தல் அறிக்கையை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்க வேண்டும்.மேலும் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் விளக்க வேண்டும் என்பதால் உரிய தயாரிப்புடன் வர வேண்டும். இக்கூட்டம் முடிவில் சில முக்கிய முடிவுகளை கமல் அறிவிக்கவுள்ளார் என துணைத் தலைவர் மகேந்திரன், பொது செயலாளர்கள் மவுரியா, முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.