மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக வழங்கி…

வெங்காய விலையேற்ற எதிரொலியால், மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் வெங்காயம் பரிசாக வழங்கினர்.வெங்காயம் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன், 50 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், தற்போது, 150 வரையும், 40க்கு விற்ற பெரிய வெங்காயம், 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.கடலுார் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், தீபா ஆகியோருக்கு, நேற்று விருத்தாசலத்தில் திருமணம் நடந்தது. அவரது நண்பர்கள் மூவர், மணமக்களுக்கு, வெங்காயத்தை ஒரு சிறிய பெட்டியில் வைத்து, பரிசாக வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here