ரூ.5000க்கு மனைவியை விற்ற கணவன்

கட்டிய கணவனே, மனைவியை ரூ.5,000க்கு விற்பனை செய்ய, அப்பெண்ணை 4 பேர்கள் சேர்ந்து, 21 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது வடக்கு சர்கோதா. இந்த ஊர் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அங்கு, தனது மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு, கணவனே 4 நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 21 நாட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அந்த பெண்ணை, 4 பேரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய அந்த பெண், உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.ஆனால் அப்புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தன் கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு எதிராக அப்பெண், சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நவ.,2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here