நீதிபதிகளுக்கு கொரோனா நீதிமன்றங்கள் மூடல்

பாகிஸ்தானில் 11 நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் நீதிமன்றங்கள் 14 நாட்கள் மூடப்பட்டு உள்ளன.நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ‘செஷன்ஸ்’ மற்றும் ‘சிவில்’ வழக்குகளை விசாரிக்கும் 70 நீதிமன்றங்கள் உள்ளன.இவற்றில் மூன்று கூடுதல் அமர்வு நீதிபதிகள் முதுநிலை சிவில் நீதிபதி மற்றும் ஏழு சிவில் கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 11 நீதிமன்றங்களும் நேற்று முன்தினம் முதல் 14 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல் இஸ்லாமாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here