பிக்பாஸ் வீட்டில் நுழையும் சுசித்ரா

அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில் அர்ச்சனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கமல்ஹாசனிடம் பாராட்டையும் பெற்று விட்டார் ஆரி. எனவே அர்ச்சனாவுக்கு எதிராக ஆரி தலைமையில் ஒரு குரூப் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று வேல்முருகன் வெளியேற்றப்பட்ட நிலையில் திடீரென சுசித்ரா பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைகிறார். இந்த தடவை பிக் பாஸ் போட்டியாளர்கள் மிகவும் கடும் போட்டியை தருகிறார்கள் என்று கமல்ஹாசனிடம் கூறிவிட்டு உள்ளே நுழையும் சுசித்ரா, அர்ச்சனா அல்லது ஆரி இந்த இரண்டில் எந்த குரூப்பில் சேர்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஆனால் சுசித்ராவின் வரவை பார்த்ததும் அர்ச்சனாவின் முகம் போகும் போக்கை பார்த்தால் அர்ச்சனா-சுசித்ரா மோதல் விரைவில் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. சுசித்ரா ஏற்கனவே சர்ச்சைக்குரியவராக வெளியே இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் வீட்டினுள்ளே அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும்? அர்ச்சனாவுக்கு அவர் சிம்மசொப்பனமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here