பிச்சை மட்டுமே எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண்

57 வயதான நபீஷா என்ற பெண் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகப் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது கணவரை 27 வயதில், விபத்து ஒன்றில் இழந்ததாக நபீஷா கூறியுள்ளார். இவர் பிச்சை எடுத்து குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார்.

பிச்சை மட்டுமே எடுத்து, 5 மாடி வீடு கட்டியுள்ளார். அத்துடன், இரண்டு வங்கிகளில் இவரது பெயரில் 3 மில்லியன் பவுண்டு பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வீடுகளிலிருந்து வாடகையையும் நபீஷா வாங்கிக் கொள்கிறார்.

பிச்சை எடுக்கச் செல்கையில் நல்ல உடல் அமைப்புடன் இருந்தால் பிச்சை கிடைக்காது என்று எண்ணி, கால் இல்லாததுபோன்று நடித்து பிச்சை எடுக்கத் துவங்கியுள்ளார். அவர், மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது அவரது காலில் எந்த பிரச்னையும் இல்லை என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது முழு விவரமும் தெரியவந்துள்ளது.

எகிப்த், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் பிச்சை எடுத்து வருமானத்தைச் சேர்க்கும் நபர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்களை உடல்நிலை பாதிக்கப்பட்டவராக காண்பித்து பிச்சை எடுக்கத் தொடங்குகின்றனர். தமிழகத்தில் கூட இறந்துபோன பிச்சைக்காரர் ஒருவரிடம் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here