அமானா துணைத்தலைவரை புக்கிட் அமானுக்கு வருமாறு அழைப்பு

கோலாலம்பூர்: நடந்துகொண்டிருக்கும் வழக்கு தொடர்பாக டத்தோ ஶ்ரீ டாக்டர் முஜாஹித் யூசோப் ராவாவை புக்கிட் அமானுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

பார்ட்டி  அமானா நெகாரா (அமானா) துணைத் தலைவர் திங்கள்கிழமை (நவம்பர் 2) மாலை 5.30 மணியளவில் புக்கிட் அமனுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் அமான் சிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு ஒத்துழைப்பேன் என்று முஜாஹித் டூவிட் செய்துள்ளார். நான் எனது ஒத்துழைப்பைக் கொடுப்பேன். எல்லாம் சீராக நடக்கும் என்று நம்பகிறேன் என்று  திங்களன்று தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் தொடங்கிய விசாரணைக்கு உதவ முஜாஹித் வரவழைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் சிஐடியின் துணை இயக்குநர் துணை ஆணையர் மியர் ஃபரிதலாத்ராஷ் வாஹித் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

நாங்கள் தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4 (1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரித்து வருகிறோம் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here