கிள்ளான்: இங்குள்ள தாமான் மேரு 1 இல் உள்ள ஒரு கடைக்குள் நுழைந்து திருடப்பட்ட நன்கொடை பெட்டிகளுடன் கொண்ட ஒருவரை 40 நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்ததாக வட கிள்ளான் ஓசிபிடி உதவி ஆணையர் நூருல்ஹுதா மொஹமட் சல்லே தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) அதிகாலை 5.10 மணியளவில் தாமான் மேரு 1 இல் கடமையில் இருந்த ஒரு ரோந்து கார் சந்தேகநபர் இரண்டு நன்கொடை பெட்டிகளை வைத்திருப்பதைக் கவனித்தார்.
பரிசோதித்தபோது, சந்தேக நபர் அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே ஒரு கடையை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார் என்று அவர் கூறினார் திங்களன்று (நவம்பர் 2) ஒரு அறிக்கையின் வழி தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அந்த நபர் பல பதிவுகளை வைத்திருப்பதாகவும், கைது செய்யப்பட்ட நேரத்தில் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏ.சி.பி நூருல்ஹுதா கூறினார்.
சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனை அவர் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்று தெரிய வந்ததாக அவர் கூறினார்.