இன்று 1,054 பேருக்கு கோவிட் தொற்று : 12 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நவம்பர் 3 ஆம் தேதி 1,054 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரையில் மொத்த உறுதி செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 34,393 ஆக உள்ளது. சபாவில்  அதிக எண்ணிக்கையிலான 678 சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.

சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் இத்தொற்றால் 12 பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும் சபா மாநிலத்தை சேர்ந்தவர்களாவர்.

ஐ.சி.யூவில் 94 பேர்   சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றில் 32 பேர்  வெண்டிலேட்டர் ஆதரவில் இருக்கின்றனர்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here