உலக சுகாதார இயக்குனரையும் விட்டு வைக்காத கொரோனா

உலக பெருந்தொற்று கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்ட சோதனையில் இருந்து வரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் கட்டுபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல தலைவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கொரோனா பாதித்த நபர் ஒருவரிடம் ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை.

எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்புவரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விசயங்களை பாதுகாக்க முடியும்.

கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here