எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளின் தேதி மாற்றம்

புத்ராஜெயா:Sijil Pelajaran Malaysia (எஸ்பிஎம்) தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி எம்.டி ஜிடின் தெரிவித்துள்ளார்.

அதே போல் Sijil Tinggi Persekolahan Malaysia (எஸ்.டி.பி.எம்) தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரண்டு தேர்வுகளின் விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று முகமட் ராட்ஸி மேலும் தெரிவித்தார். எஸ்பிஎம் முதலில் அடுத்தாண்டு ஜனவரி 6 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here