டிரம்புக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் நவம்பர் 4 ஆம் தேதியிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான ஜோ பிடன் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்து விட்டதாகவும் விரைவில் அவரது வெற்றி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நடக்கும் இடங்களில் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

ஏற்கனவே இதுபோன்று பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் டிரம்புக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் முதல் முறையாக ட்ரம்புக்கு சாதகமான உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளது.

 

பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் கண்காணிப்பாளர்கள் வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்குகள் எண்ணப்படும்போது கண்காணிப்பாளர்களை அனுமதிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது

 

பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கை வழக்கில் டிரம்புக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கண்காணிப்பாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டால் தங்களுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஆனால், வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன் இருப்பதால் டிரம்ப் மீண்டும் அதிபராக வாய்ப்பே இல்லை எனவும் கருதப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here