சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நாளை வெளியாக இருக்கிறது. குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.
சூரரைப் போற்று திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள் இதோ
1 – உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது. நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இயக்குநர் சுதாவும் அவரது அணியும் தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம் செலவிட்டுள்ளனர். தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து அதை இன்று சூரரைப் போற்று இருக்கு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் சாரத்துக்கு உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
2 – பரபரப்பான கதை – சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும்.
3 – தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் – இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது. உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறந்த இந்த அட்டகாசமான ஆக்‌ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது இன்னொரு காரணம்.
4 – சுதா மற்றும் சூர்யா கூட்டணி – சுதாவின் நுட்பமும், சூர்யாவின் திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யா, முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார். இந்த இயக்குநர் – நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here