பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணம்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, தனது தந்தை கனடாவில் பணிபுரிவதாகவும், 10 ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை என்றும் உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார்.
இதையடுத்து அவரது தந்தை, பிக்பாஸ் வீட்டில் வந்து லாஸ்லியாவை சந்தித்த காட்சிகள் மனதை நெகிழ வைத்தது. அப்போது கவினுடனான காதல் விவகாரத்தில் அவர் தனது மகளை கண்டித்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ள லாஸ்லியா அவர் மரணத்திற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இதை அறிந்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here