மகாத்மாவின் கொள்ளுப் பேரன் கொரோனாவுக்குப் பலி

புதுடில்லி:

மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா(66) கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவவில்  நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.,22) மாலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

latest tamil news

மஹாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. இவரது பேரன் சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு உமா, கீர்த்தி மேனன் என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here