எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

மலேசியா-தாய்லாந்து எல்லைப் பதிவில் கடமையில் இருந்த பொது ரோந்துப் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அதிகாலை 3 மணியளவில் எல்லையில் சேவையில் ஈடுபட்டிருந்த கே.பி.எல் பஹாருதீன் ராம்லி (54) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் உடல் அலோர் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதே வேளை மற்றொரு வீரரான நோரியான் தாரி படுகாயமடைந்தார்.

வடக்கு படையணி GOF தளபதி மூத்த உதவி ஆணையர் அப்துல் கானி முகமது ஜி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். விசாரணையின் பின்னர் மேலதிக தகவல்களை வழங்குவதாக அவர் கூறினார்.

காவல் படைத்தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் பாதிக்கப்பட்டவர்களை காண பெர்லிஸுக்கு சென்று  கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here