சுவீடனில் கடைசி மரண தண்டனை – நிறைவேற்றப்பட்ட நாள் நவம்பர் 23, 1910

1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.

1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.

1924 – அந்திரொமேடா “நெபுலா” உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் ஜெர்மனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here