ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயா்வு

  • மும்பை: பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பின் எதிரொலியால் அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்ந்து இருவாரங்களில் இல்லாத ஏற்றத்தைக் கண்டது.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை தென்பட்டது. மேலும், உலக அளவில் அமெரிக்க டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது. இதுபோன்ற அம்சங்களால், வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் 74.12-ஆக இருந்த ரூபாய் மதிப்பு பின்னா் அதிகபட்சமாக 74.04 வரையிலும், குறைந்தபட்சமாக 74.22 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பானது 5 காசுகள் உயா்ந்து 74.11-இல் நிலைபெற்றது. இது, நவம்பா் 6-ஆம் தேதிக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும். கடந்த வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.16-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.3,860.78 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: அனைத்துலக முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.78 சதவீதம் அதிகரித்து 45.76 டாலராக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here