அரசியலில் தடுமாறும் ரஜினி

அமித்ஷாவின் தமிழக பயணத்தின்போது ரஜினியுடன் சந்திப்பு நிகழும் என்று அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த சந்திப்பு நடக்காமலேயே டெல்லி சென்றார் அமித்ஷா. ஆனால், ரஜினியுடன் தான் ஆலோசனை நடத்தியது குறித்து சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்த அமித்ஷாவிடம் சொல்லி இருக்கிறார் குருமூர்த்தி.

தமிழகப் பயணம் குறித்து டெல்லில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தியபோது, பிரதமர் மோடி ரஜினியுடன் பேச வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதுகுறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்த் நாளை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

உடல்நிலை காரணம் கருதியும், கொரோனா வைரஸ் அச்சம் கருதியும் கட்சி ஆரம்பிப்பதா? வேண்டாமா? என்பதை மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசி முடிவை அறிவிப்பதாக சொல்லி இருந்தார் ரஜினி. அதற்காகத்தான் அவர் நாளை ஆலோசனை கூட்டத்தினை கூட்டி இருப்பதாக தெரிகிறது.

இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதிகளை வைத்து இருக்கின்ற இடத்திலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு கட்சியை நடத்தலாம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு கடிதங்கள் எழுதி உள்ளனர். இதனையும் கவனத்தில் கொண்ட ரஜினி, நாளைக்கு என்ன சொல்லப்போகிறாரோ?

நாளை 30.11.2020 நடக்கும் இந்த ஆலோசனைக்கூட்டம் முன்னதாகவே கடந்த 20.11.2020 அன்றே நடைபெறுவதாக இருந்தது.

அமித்ஷா தமிழக வருகையினால் அந்த முடிவை மாற்றிக்கொண்ட ரஜினி, அமித்ஷா வந்துபோன பிறகு ஆலோசனைக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று 20  ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார் ரஜினி.

கமெண்ட்: எல்லாம் நாடக மேடை, எடுபடுமா அரசியல் வாடை! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here