ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.
மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது.
இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பெண் ரசிகர் ஒருவருக்கு மைதானத்திலேயே முழங்காலிட்டு காதலை வெளிப்படுத்தினார்.

அந்த நேரத்தில் இதனை எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால் சட்டென, இந்தியரின் காதலுக்கு அப்பெண் பச்சைக்கொடி காட்டினார்.

உடனே அந்த இளைஞர் தான் கொண்டு வந்த மோதிரத்தை எடுத்து நீட்டினார். பெண்ணும் அவரின் காதலை அந்த இடத்திலேயே ஏற்றுக் கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தும் விதமாக கட்டித் தழுவினார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆஸ்திரேலிய வீரர்களுடன் தோற்றுப்போனாலும், அந்நாட்டு பெண்ணின் இதயத்தில் இந்திய இளைஞர் இடம் பிடித்ததை இந்தியர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இதைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி ஊக்கமளித்தார்.

இந்தியாவுக்கு எதிரான  2- ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

 

கமெண்ட்:  விளயாட்டல்ல  காதல்! அது, விசா இன்றி நாடு கடந்துபோகும் உணர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here