மோடியின் பெயரில் ஆடு-  70 லட்சம் ஏலம் கேட்டும் மறுப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடியின் பெயரில் உள்ள ஆடு ஒன்று 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது. ஆனாலும் ஆட்டின் உரிமையாளர் அந்த ஆட்டை ஏலம் விட மறுத்துவிட்ட தகவல்  பரவலாகப் பேசப்படுகிறது .

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சங்கோலா என்ற பகுதியில்  கால்நடை, வளர்ப்பு விலங்குகளின் ஏலம் நடந்தது.  இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பாபுராவ் மெட்காரி என்பவர் மோடி பெயரில் உள்ள ஒரு ஆட்டை ஏலம் விட வந்தார். அவர் அந்த ஆட்டை ஏலம் விட்டபோது லட்சக்கணக்கில் அந்த ஆட்டை விலைக்கு வாங்க பலர் முயற்சித்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த ஆட்டின் விலை 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது. ஆனால் 70 லட்ச ரூபாய்க்கு தனது ஆட்டை தரமுடியாது என்றும் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே விற்பனை செய்வேன் என்றும் அந்த ஆட்டின் உரிமையாளர் கூறினார்.

இதனை அடுத்து கடைசி வரை அந்த ஆடு விற்பனை ஆகவில்லை என்பதால் ஆட்டின் உரிமையாளர் ஏமாற்றத்துடன் வீடு சென்றார். அடுத்த வாரமும் இந்த ஆடு ஏலத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கமெண்ட் : ஆட்டு -வித்தால் யார்தான் ஆடமாட்டார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here