இந்தியாவிலேயே 2-வது சிறந்த காவல் நிலையத்துக்கான விருது

ந்தியாவிலேயே 2-ஆவது சிறந்தகாவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமியிடம் கோப்பையை வழங்கி சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

மத்திய அரசு கடந்த 2016- ஆம்ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோவு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களைக் குறைத்தல், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப் பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது

கடந்த 2017-  ஆம் ஆண்டில் கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையமும், 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையமும், 2019ஆம் ஆண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த விருதை பெற்றன.

தற்போது, சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டின் 2-வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு பெற்று விருது பெற்றுள்ளது.

இதனிடையே, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்த விருது கோப்பையை சேலம் வந்த முதல்வர் பழனிசாமியிடம் வழங்கி, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் சந்திரசேகரன், செந்தில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, உதவி ஆய்வாளர்கள் உமா ராணி, ஜெரீனா பீவி உள்ளிட்டோர் வாழ்த்து பெற்றனர்.

கமெண்ட்:  போலிகள் அல்லர் என்று எடுத்துக்காட்டாய் விளங்கும் போலீசார்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here