இன்று நள்ளிரவு தொடங்கி எரிப்பொருள் விலையில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா: டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11 வரை எரிபொருள் விலை அதிகரிக்கும். RON97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் கூறியது. இதற்கு முன்பு ஒரு லிட்டருக்கு RM1.97 இலிருந்து மூன்று சென் உயர்ந்துள்ளது.

RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.67 இலிருந்து RM1.70 ஆக மூன்று சென் அதிகரிக்கும். அதே நேரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு RM1.85 இலிருந்து RM1.85 ஆக ஐந்து சென் அதிகரிக்கும்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் (ஏபிஎம்) கீழ், ஜனவரி 5,2019 அன்று வாராந்திர எரிபொருள் விலை பொறிமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் கீழ், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் வரை நடைமுறையில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here