கர்ப்பிணிக்கு டெலிவரி -அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

பிரேசில் நாட்டில் போலீசார் வழக்கம் போலச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட நீங்கள் இப்போது இருக்கும் சாலை வழியாகத்தான் கடத்தல் போதைப் பொருள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை யார் கடத்தி வருகிறார்கள், என்ன வாகனத்தில் வருகிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் காவல்துறையிடம் இல்லை. குழம்பிப்போன போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த பெண் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஒரு நிமிடம் பிரேக் போட்டு திருதிருவென முழித்தபடி வந்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்தக் காரைநிறுத்தி சோதனை செய்தனர். காரை சோதிக்க வேண்டும் கொஞ்சம் கீழே இறங்குங்க என்று கூறியுள்ளனர். கீழே இறங்கிய அந்த பெண்மணி அவருடைய போலியான கர்ப்பமான வயிற்றை அடிப்பகுதியில் பிடித்தவாறே நின்று கொண்டிருந்துள்ளார்.

சந்தேகம் வந்து சோதனை செய்து பார்த்தபொதுதான் பெண்மணி தர்ப்பூசணி பழத்தைப் பாதியாக அறுத்து, அதற்குள் கொக்கேய்ன் என சொல்லப்படும் போதைப் பொருளைக் கடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே அப்பெண்மணியைக் கைது செய்து, அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here