டிடெக் கும்பலின் எழுவர் தடுத்துவைப்பு – ஏ.சி.பி மொஹமட் ஃபாரூக்

கோலாலம்பூர்-
நவம்பர் 26 முதல் நவம்பர் 29 வரை அம்பாங் ஜெயா மாவட்டத்தைச் சுற்றியுள்ள கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கடைகளுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் ‘டிடெக்’ கும்பலின் 7 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி மொஹமட் ஃபாரூக் இஷாக் கூறுகையில், கோலாலம்பூர், அம்பாங் ஜெயாவைச் சுற்றியுள்ள சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எழுவர் சந்தேகத்தின் பேரில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் சந்தேக நபர்களான இவர்கள் 27 முதல் 42 வயதிற்குட்பட்டவர்களளாவர். அவர்களின் சிறுநீர் பரிசோதனைகள் அனைத்தும் மெத்தாம் பெத்தமைனுக்குச் சாதகமாக இருந்தது. ஏழு பேருக்கும் போதைப்பொருள், கிரிமினல் குற்றங்கள் தொடர்பான பதிவுகள் உள்ளன.
அவற்றில் இருவருக்கு முன்னர் குற்றத் தடுப்புச் சட்டம் (போகா), 1959 ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம், 1985 ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டு கார்கள், இரண்டு கத்திகள், சியாபு என சந்தேகிக்கப்படும் ஒரு பொட்டலம் ,  ‘எரிமின் 5’ என சந்தேகிக்கப்படும் ஒரு மாத்திரை, கைப்பேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக மொஹமட் ஃபாரூக் தெரிவித்தார்.
ஏழு பேரைக் கைது செய்ததன் மூலம், அம்பாங் ஜெயா மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு, நான்கு கொள்ளைகள், இரண்டு கடை உடைப்புகள் சமபத்திற்க்கான தீர்வு கிடைத்து என்று  நம்புவதாக போலீசார்  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here