தலைவிக்காக சூப்பர்மேனாக மாறிய விஜய் , படக்குழு

அரசியலில் தனி முத்திரை பதித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 74 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி 5.12.2016  இல் உயிரிழந்தார். அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் தமிழகமெங்கிலும் அவரது உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், அம்மா ஜெயலலிதா என்ற ஹேஷ்டேக்குகளையும் முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், தலைவி என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தில் ஜெ  கேரக்டரில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று தலைவி படத்தின் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் விஜய். மேலும், தலைவி என்ற ஹேஷ்டேக்கினையும் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறது தலைவி படக்குழு.

இதுகுறித்து கங்கனா ரணாவத், ”ஜெயாம்மாவின் நினைவுநாளில் இந்த படங்களை வெளியிட்டதில் நெகிழ்ச்சியடைந்தார். இன்னும் ஒரு வாரத்தில் தலைவி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிடும். ஒரு சூப்பர் மேன் மாதிரி படத்தை வேகமாக முடித்து வருகிறார் விஜய்  என்று பாராட்டியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here