வாஷிங்டன்-
இதனிடையே தனது தலைமையில் அமையும் மந்திரி சபையில் இடம் பெறும் நபர்களை ஜோ பிடன் அறிவித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவின் புதிய சுகாதார மந்திரியாக கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை நியமிக்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அவசியம் ஆகும். அப்படி ஒருவேளை செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமெரிக்க சுகாதார மந்திரியாக இணைக்கப்படும் முதல் லத்தீன் அமெரிக்கர் என்கிற பெருமையை சேவியர் பெக்கெரா பெறுவார். 62 வயதான சேவியர் பெக்கெரா, கடந்த 2016- ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் சுகாதாரத்துறையை வழி நடத்தும் சவாலான பணியை சேவியர் பெக்கெரா ஏற்க உள்ளார்.