இரவு உணவிற்குப் பிறகு 100 நூறு அடியாவது நடக்க வேண்டும் என்றும் இடது பக்கமாக சரிந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் “அஷ்டாங்க சங்கிரஹம்’ எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

  1. சிறு குடலில் உற்பத்தியாகும் மலப்பகுதிகள், இலியோசீக்கல் வால்வு எனும் பகுதி வழியாக, வலதுபகுதியில் அமைந்துள்ள ஆரம்ப நிலையான பெருங்குடலில் சேர்த்து, வலது குடல்வழியாக, வயிற்றின் குறுக்கே நகரும் பெருங்குடல் மூலம், இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலில் நகருவதால், புவி ஈர்ப்பு சக்தியின் மூலமாக, மலமானது எளிதில் நகர்வதற்கு உதவுகிறது. இதனால் மறுநாள் காலை, மலக்கழிவானது எளிதில் ஏற்படும்.
  2. நிணநீர் சுரப்பிகளிலுள்ள நீரில், புரதம், க்ளுகோஸ், இதர கழிவுகள், அதன்குழாய்களின் நடுநடுவே அமைந்துள்ள முடிச்சு போன்ற க்ரந்திகளின் மூலம் சுத்தமாக்கப்பட்டு, இதயத்தின் இடது பக்கம் வந்து சேர்வதை, இடது பக்கம் சரிந்து படுப்பது எளிதாக்குகிறது. மேலும் இதயத்தின் வேலைப் பளுவும் குறைகிறது.
  3. இதயத்தின் இடதுகீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனுமிடத்திலிருந்து பெரும் தமனி வழியாக, ரத்தத்திலுள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும்போது புவியீர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதயத்தினுடைய சுருங்கும் தொழிலானது சுலபமாக்கப்படுகிறது.
  4. கரியமில வாயுவானது இன்பீரியர் வீனேகேவா எனும் மெல்லிய சுவருடன் கூடிய குழாய்மூலம் கீழ் உடலில் சேர்ந்து ரத்தத்தில் சேகரிக்கப்பட்டு, உடலின் வலதுபக்கத்தில் நகர்ந்து இதயத்தை வந்தடைவதால், இடது பக்கம் சரிந்து படுப்பதன்மூலமாக, உடல் உறுப்புகள், இடது பக்கம் சரிவதன் விளைவாக, இந்த ரத்தக்குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, அதன் தொழிலை சிறப்பாகச் செய்யமுடிகிறது. இதயமும் கரியமிலவாயுவை நன்றாக உள்வாங்கி, வலது கீழ் பக்கத்திலுள்ள அறைக்குக் கொண்டு சென்று, நுரையீரலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதன் வேலைப்பளுவும் எளிதாகிறது.
  5. மண்ணீரல் இடதுபக்கம்அமைந்துள்ளது. பெரிய நிணநீர் க்ரந்தியானது இது, நிணநீரை சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்திலுள்ள சில கசடுகளையும் சுத்தப்படுத்துகிறது. இடது பக்கம் படுப்பதால், நிணநீர் மற்றும் ரத்தம் ஆகியவை அதனுள் எளிதாக நுழைகின்றன. இதனால் மண்ணீரல் தன்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும். இதய சுருக்கத்தை விட, தசை சுருக்கத்தின் மூலமாகத்தான் நிணநீரிலுள்ள அணுக்கள் விரைவாக நகருகின்றன என்பதால் இடது பக்கம் படுப்பதன் மூலம், தசை சுருக்கத்தின் செயல்பாடும் மேம்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here