செவரளிப்பூவின் அழகோடு அறிவியல்

செவ்வரளி
செவ்வரளிச் செடிகள் என்று இதற்குப் பெயர். சாலையில் பார்த்திருப்பீர்கள். அதன் வாசனை மூக்கைத் துளைக்கும். அதைப் பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக இருக்கும். சாலையின் நடு, நடுவே செவ்வரளிச் செடியை நட்டுவைப்பதன் பின்னால் மிகப்பெரிய அறிவியலே இருக்கிறது.

சாலையோரத்தில் அதிகமான வாகனங்கள் சென்றுகொண்டே இருக்கும். இந்த வாகனத்தின் புகையில் கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு இருக்கும். இதை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக திருப்பிக்கொடுக்கும் பண்பு தாவரங்களுக்கு எல்லாவற்றுக்குமே உண்டு. இது செவ்வரளிக்கு இன்னும் கூடுதலாக இருக்கும்.

இதன் இலைகளின் அடர்த்திதான் இதற்குக் காரணம். இது காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.

செவ்வரளி பொதுவாகவே வறண்ட பகுதிக்கு ஏற்ற தாவரமாகும். இதனால் யரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல், மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் செவ்வரளி முக்கியப்பங்கு வகிக்கிறது.

இது வாகனத்தின் முகப்பு விளக்கு, எதிரேவரும் வாகனத்தில் படராமலும் தடுக்கிறது. பொதுவாக, செவ்வரளி இலைகளை ஆடு, மாடு என எதுவும் சாப்பிடாது. அழகு மட்டுமே பிரதானம் என்பதால் செவ்வரளியை விறகுக்கும் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி மட்டுமே நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here